தலைப்புச் செய்திகள்

ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை, அமைச்சர் நலிந்த வெளியிட்டார்

தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 87 உடல்கள் மீட்கப்பட்டன என்று, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (05) நாடாளுமன்றில் உறுதிப்படுத்தினார்.

கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 நபர்களும் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என்று அமைச்சர் நளிந்த இன்று தெரிவித்தார்.

குறித்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில், அதிலிருந்தவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் மீட்டனர்.