தலைப்புச் செய்திகள்

ஈரான் கப்பலைத் தாக்கிய நீர் மூழ்கிக் கப்பலில் அவுஸ்ரேலிய மாலுமிகள் இருந்தனர்: 9News செய்தி

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இரண்டு ஆஸ்திரேலிய மாலுமிகள் இருந்தனர் என, அவுஸ்ரேலிய 9News செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ‘குண்டு’ ஈரானிய போர்க்கப்பல் IRIS Denaவை மோதியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு – ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், ஒரு எதிரி போர்க்கப்பலை மூழ்கடித்தது இதுவே முதல் முறையாகும்.

இரண்டு அவுஸ்ரேலிய மாலுமிகளும் AUKUS பாதுகாப்பு கூட்டுப் பயிற்சி ஏற்பாட்டின் ஒரு பகுதியாக – அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றினர்.

கப்பலில் உள்ள மாலுமிகளின் தரவரிசை அல்லது பங்கை வெளியிட அவுஸ்ரேலியாவின் பாதுகாப்புத் துறை மறுத்துவிட்டது.

இந்தத் தாக்குதலை அவுஸ்ரேலியா அல்ல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டன என்றும் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பன்னாட்டு கடற்படை நடவடிக்கைகளில் பங்கேற்ற பிறகு – ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஈரான் கப்பல் தாக்கப்பட்டது.