
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க – இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இன்று (04) கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்றார்.
“அவரது பதவிக்காலத்தில் எங்கள் இருதரப்பு உறவுகள் கணிசமாக விரிவடைந்தன. இலங்கை தொடர்ந்து ஈரானின் நட்பைப் பாராட்டுகிறது. எங்கள் எண்ணங்கள் ஈரானிய மக்களுடன் உள்ளன” என்று வெளியுறவு அமைச்சர் ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க – இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ஆத்மீக உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டார்.


