
2025ஆம் ஆண்ட 09 சிறுவர் திருமணங்கள் நடந்தன என்றும், பதின்ம வயதினர் 79 பேர் கர்ப்பமடைந்தனர் எனவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சிறுவர்கள் தொடர்பான மொத்தம் 10,455 முறைப்பாடுகளை தாம் பெற்றதாக அதிகாரசபை அறிவித்துள்ளது. இவற்றில் 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வந்தன, அதே நேரத்தில் 1,941 முறைப்பாடுகள் அதன் நேரடி அதிகார வரம்பிற்கு வெளியே இருந்தன.
545 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், 231 கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள், 38 சிறுவர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் மூன்று கருக்கலைப்புகள் ஆகியவையும் முறைப்பாட்டில் அடங்கும்.

மேலும், சிறார்களை குறிவைத்து 150 சைபர் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் சிறுவர்களிடையே 20 தற்கொலை முயற்சிகளும் பதிவு செய்யப்பட்டன.
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகள் பற்றிய 42 புகார்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்ததால் இளம் குழந்தைகள் பின்தங்கிய ஒன்பது சம்பவங்கள் ஆகியவை குறித்தும் முறையிடப்பட்டுள்ளன.


