தலைப்புச் செய்திகள்

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த வருடம் 41 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

ஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஆண்டு 41 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர் என்று, லஞ்ச – ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நொவம்பர் 30 வரையிலான – ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, 35 தண்டனைகளின் அடிப்படையில் 41 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒரு சுகாதாரத் தொழிலாளி, ஒரு லைன்ஸ்மேன், ஒரு கால்நடை வைத்தியர், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள், ஒரு விவசாய அபிவிருத்தி அதிகாரி ஆகியோரும் அடங்குவர்.

கடந்த ஆண்டு நொவம்பர் 30ஆம் திகதி வரையில் மேல் நீதிமன்றங்களில் 270 வழக்குகள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் 16 வழக்குகள், ஒரு ட்ரயல் அட்பார் வழக்கு நிலுகைளில் இருந்தன.

கடந்த ஆண்டு மட்டும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 7,811 முறைப்பாடுகள் வந்தன. அவற்றில் 439 புகார்கள் மட்டுமே மேலதிக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டன. முன்னேற்ற அறிக்கையின்படி, குறைந்தது 2,546 விசாரணைகள் மேலதிக விசாரணை நிலுவையில் உள்ளன.

ஆணைக்குழு மேற்கொண்ட மொத்த 119 சோதனைகளில், 61 பயனுள்ளவையாக மாறின, இவற்றில் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.