தலைப்புச் செய்திகள்

தபால் திணைக்களம் கடந்த வருடம் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் வருவாய் ஈட்டி சாதனை

பால் திணைகம் கடந்த ஆண்டு,1310 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றுள்ளதாக, அந்தத் திணைக்களம் தெரவித்துள்ளது.

இதன் மூலம், கடந்த ஆண்டு திறைசேரி நிர்ணயித்த வருவாய் இலக்கை அந்தத் திணைக்களம் தாண்டியுள்ளது.

இந்த விடயங்களை தபால் மா அதிபர் ருவன் சத்குமார கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் தபால் திணைக்களத்தின் பல்வேறு பதவிகளில் கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் சேவை உறுதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 378 உப தபால் அதிபர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு உப தபால் அதிபர்கள் சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும்.