தலைப்புச் செய்திகள்

எதிர்க்கட்சிப் பேரணியில் கலந்து கொண்ட மௌலவிக்கு மிரட்டலாம்: சிஐடி-யில் முறைப்பாடு

நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிப் பேரணியில் கலந்து கொண்டமைக்காக, தான் அச்சுறுத்தப்பட்டதாக மௌலவி ஒருவர் சிஐடியில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய மௌலவி; இந்த நிகழ்வுக்கான மத நடவடிக்கைகளை நடத்துவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனாலேயே அதில் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

”நொவம்பர் 21 ஆம் திதி மாலை முதல், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் மற்றும் யூ-டியூப் வழியாக எனக்கு அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கின.

இங்கு நான் ஏன் மத நடவடிக்கைகளை நடத்தினேன், யார் என்னை அழைத்தார்கள் என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து அந்த எதிரணியுடன் செயற்பட்டால், என்னைப் ‘பார்த்து’க் கொள்வதாகவும் மிரட்டுகிறார்கள்” எனவும் மௌலவி மேலும் தெரிவித்துள்ளார்.