
நபர் ஒருவரை 2011ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் 10 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு முல்லகசாய பகுதியில் நடந்த கொலை தொடர்பான வழக்கில் மேற்படி நபர்களை குற்றவாளிகளாகக் கண்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் – கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேல் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை விதித்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.


