
கிழக்கு மாகாணத்தில் இந்திய நிதியுதவியின் கீழ், அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 33 தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மாகாணத்தின் முக்கிய வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 33 திட்டங்களுக்கு நிதியளிக்க ரூ. 2,371.83 மில்லியன் மானியத்தை இதன்கீழ் இந்தியா வழங்கும்.
ஒவ்வொரு திட்டமும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இடையே ஒரு தனி புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் முறைப்படுத்தப்படும்.

கிழக்கு மாகாணத்தில் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 33 தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தொடர – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் – கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும், இவ்வருடம் ஏப்ரல் 05ஆம் திகதி – புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.


