
சட்டத்தரணி ஒருவரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு, இன்று (13) பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்கிசை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, சட்டத்தரணியொருவரை மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக கூறப்படுகிறது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை தலா 01 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் நடந்த நேரத்தில் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க என்பவர் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக மேலதிக ‘பி’ அறிக்கை மூலம் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக குறித்த சட்டத்தரணி இன்னும் நீதிமன்றத்திலோ பொலிஸ் நிலையத்திலோ ஆஜராகி வாக்குமூலம் வழங்கவில்லை என்றும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.


