தலைப்புச் செய்திகள்

வீடொன்றில் துப்பாக்கிச் சூடு: எல்பிட்டிய பிரதேசத்தில் சம்பவம்

எல்பிட்டிய – ஓமத்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபரொருவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. வீட்டின் ஜன்னலொன்று மட்டும் சேதமடைந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், அந்தப் பகுதியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எல்பிட்டிய பொலிஸார் – இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.