தலைப்புச் செய்திகள்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது: மனைவியால் சிக்கினார்

கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவை – குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், அவரின் மனைவி புதையல் தோண்டியமை தொடர்பில் இவர் கைதாகியுள்ளார். 

புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே சென்றமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, தொலைபேசி ஆய்வுகள், பாதுகாப்பு கெமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி மற்றும் 08 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.