
லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் தன்னை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று (18) கொழும்பு பிரதம நீதவான் தனுஜ லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருப்பினும், வழக்கில் முறைப்பாட்டாளரான லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் – நீதிமன்றத்தில் ஆஜராகும்போது மட்டுமே, அத்தகைய கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்று பிரதம நீதவான் கூறினார்.

அதன்படி, ராஜித சேனாரத்னவின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.



