தலைப்புச் செய்திகள்

36 அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் நிராகரிப்பு

திவுக்கு விண்ணப்பித்த 83 புதிய அரசியல் கட்சிகளில் 36 கட்சிகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்கு விண்ணப்பித்த குறித்த அரசியல் கட்சிகள், ஆரம்ப பரிசீலனையின் போது அடிப்படைத் தகைமைகளை பூர்த்தி செய்ய தவறியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மீதமுள்ள 47 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இந்த அரசியல் கட்சிகளின் நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இதுவரை 86 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.