
கைவிடப்பட்ட ஒரு பைக்குள் இன்று (18) காலை – கடுவெல, கொரத்தொட்ட – துனடஹேனவில் வீதியோரத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானவை அல்ல என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பையில் இருந்த மூன்று ரி-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஐந்து ‘பிரவ்னிங்’ வகை கைத்துப்பாக்கிகள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அவற்றுடன் கண்டெடுக்கப்பட்ட ரி-56 துப்பாக்கி மகசின்கள் உண்மையானவையாகும்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் நவகமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.



