
– ஏ.எல். நிப்றாஸ் –
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மற்றும் அஸ்-ஸிறாஜ் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் 1998ஆம்ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திலும், 2001 இல் உயர்தரத்திலும் கல்விகற்ற மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் அட்டாளைச்சேனை ‘லியாடிவில்லா’ வளாகத்தில் கடந்த சனிக்கிழமை (16) மாலை இடம்பெற்றது.

‘வீ ஆ ஃபிரண்ட்ஸ்’ (நாங்கள் நண்பர்கள்) என்ற தாரக மந்திரத்தின் கீழ் – கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் மேற்படி பழையமாணவர்கள் குழு, ஆறாவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஒன்றுகூடலில் சுமார் நூறு பழைய மாணவ நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இக் காலப் பகுதியில் கல்விகற்று உயிரிழந்த 04 சக மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றதுடன், இந்த நண்பர்கள் குழுவின் நோக்கம், கடந்து காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நற்பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டது.



