தலைப்புச் செய்திகள்

பொத்துவில் பகுதி குளங்கள், அணைக்கட்டுளின் புனர்நிர்மாண வேலைகளை அமைச்சர் வசந்த, ஆதம்பாவா எம்.பி பார்வை

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

பொத்துவில் பிரதேச எல்லைக்குரிய 08 குளங்கள், அணைக்கட்டுக்களை நிர்மாணிக்கும் பணிகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை சமூக வலுவூட்டல் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ இன்று (17) பார்வையிட்டார்.

விவசாயிகளின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், விவசாய அமைச்சு மற்றும் உலக வங்கியின் அனுசரணையின் கீழ் – குளங்கள் மற்றும் வாவிகளிகளை புனர்நிர்மாணம் செய்யும் அரசின் திட்டத்தின் கீழ், மேற்படி பொத்துவில் பகுதி குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவும் அமைச்சருடன் வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்வில், விவசாய அமைச்சின் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் என, பலர் கலந்து கொண்டனர்.