
நீரில் மூழ்கி இந்த ஆண்டு – இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களில் 37 பெண்களும் 220 ஆண்களும் அடங்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீரிர் மூழ்கிய 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.



