
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் இன்று (01) அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விதிகளை மீறி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த ஒரு சம்பவத்தில் ஈடுபட்ட தொழில்நுட்ப பீடம் மற்றும் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, இந்தத் தடையை எழுத்து மூலம் உப வேந்தர் அறிவித்துள்ளார்.
இதன்படி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் மற்றும் சம்மாந்துறை வளாகங்களினுள் பிரவேசிப்பதற்கு – குறித்த மாணவர்களுக்கு தடையேற்பட்டுள்ளது.

மேற்கூறிய மாணவர்கள் உடனடியாக தங்கள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை பல்கலைக்கழக வளாகத்தின் எந்தப் பகுதிக்கும் நுழைய வேண்டாம் என்றும் இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.



