
நாட்டில் ஏற்படும் திடீர் விபத்துகளால் நாளாந்தம் சராசரியாக 29 பேர் உயிரிழக்கின்றனர் என சமூகநல சுகாதார நிபுணர் டொக்டர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இது தவிர்க்கக்கூடிய ஒரு பேரழிவாகும் எனவும் அவர் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், விபத்துத் தடுப்பு குறித்து பேசியபோது டொக்டர் சிறிதுங்க இந்தத் தகவலை வெளியிட்டார்.

அந்த வகையில்; ஆண்டுக்கு சுமார் 10,600 பேர் திடீர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இதனுடன், 1,500 பேர் தவறி விழுந்து ஏற்படும் காயங்களால் மரணமடைகின்றனர்.
“இந்த உயிரிழப்புகளைத் தடுக்கும் வழிகள் இருக்கின்றன” என டொக்டர் சிறிதுங்க மேலும் தெரிவித்தார்.
அதற்காக, பொதுமக்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் விரைவில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


