தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை அந்நூரிலிருந்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்கு தேர்வான மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் பாடசாலை அதிபர் ஏ. முகம்மட் அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மத்துல்லா கலந்து கொண்டர். சிறப்பு அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். பி. அனீஸ், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் இல்முடீன் அபூபக்கர் ஆகியோருடன் அபிவிருத்தி, பயிற்சிக்கான உலக கலாசார நிலைய பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷேஹ் எம்.எஸ். றிஸாட் (ஷஹ்வி, றியாதி), அல்- மினா பாடசாலையின் அதிபர். எம்.ஐ.எம்.றியாஸ் மற்றம் கிராம சேவை உதிதியோகத்தர் எம்.அஸ்லம் சஜா ஆகியோர் பங்குபற்றினர்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழக நுழைவுக்கு தேர்வாகிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. மேலும், இம்மாணவர்களின் அடைவுக்கு முழுப் பங்களிப்புகளையும் வழங்கிய அதிபர், ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

2024ஆம் ஆண்டு முதற்தடவையாக பரீட்சைக்கு தோற்றிய எட்டு மாணவர்களும், இரண்டாம் தடவையாக தோற்றிய இரண்டு மாணவர்களும் அடங்கலாக பத்து மாணவர்கள் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டனர்.

இந்த நிகழ்வுக்கான முழு அனுசரணையினை அபிவிருத்தி, பயிற்சிக்கான உலக கலாசார நிலையத்தின் கொழும்பு அலுவலகம் வழங்கியது.

இம்மாணவர்களில் இருவர் சட்டத்துறைக்கான நுழைவுப்பரீட்சை, நேர்முத் தேர்வுக்கு தோற்றியுள்ளனர். இன்னொரு மாணவர் சப்ரகமுவ பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான துறைக்கான நுண்ணறிவுப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதுடன், ஏனைய மாணவர்கள் தங்களது அனுமதிகளை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.

பாடசாலையின் உயர்தரப் பிரிவு வலயத் தலைவர் அஷ்ஷேஹ் எம்.ஏ. முபீன் ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்களின் பெற்றோர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.