
வங்கிக் கணக்கை ஒன்லைன் ஊடாக மோசடியாக அணுகி, 05 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவத்தில், ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவரை நேற்று வியாழக்கிழமை (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) கைது செய்தனர்.
சந்தேக நபர் வவுனியாவின் சின்ன புதுக்குளத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மோசடியாக வங்கிக் கணக்கு கையாளப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சிஐடியின் இணையக் குற்றப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.



