
இலங்கை போக்குவரத்து சபை – சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் தற்போது 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சாரதிகளுக்கு 450 வெற்றிடங்களும் (ஆண்களுக்கு 425, பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர்களுக்கு 300 வெற்றிடங்களும் (ஆண்களுக்கு 275, பெண்களுக்கு 25) உள்ளன.
விண்ணப்பிப்தற்கான இறுதித் திகதி இம்மாதம் 31ஆம் ஆகும். விண்ணப்பிக்கும் பதவி மற்றும் தொடர்புடைய மாகாணம் – கடித உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை நேர்முகப்பரீட்சையின் போது சமர்ப்பிக்க வேண்டும். முழுமையற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.



