தலைப்புச் செய்திகள்

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித, முன்பிணை கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்

மீன்வளத்துறை முன்னாள்அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (14) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டதாகக் கூறப்படுகம் இந்த வழக்கில் இவ்வாறு முன்பிணை கோரப்பட்டுள்ளது.

மணல் அகழ்வுத் திட்டத்தை ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கியமையினால் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் வழக்கல், கடந்த 18 நாட்களாக ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு, லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முயற்சித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு உத்தரவு கோரியது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்வதற்கு எந்த சட்டத் தடைகளும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதன்படி, ராஜித சேனாரத்னவை காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சந்தேக நபர் வாக்குமூலம் வங்குவதற்கு பலமுறை அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் ஆஜராவில்லை.

இதேவேளை, ராஜித சேனாரத்ன தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.