தலைப்புச் செய்திகள்

‘இஸ்ஸதீன் பௌன்டேசன்’ நிதியிலிருந்து, அட்டாளைச்சேனை அல் – ஜன்னா பாடசாலைக்கு உதவி

அட்டாளைச்சேனை அல் – ஜன்னா பாடசாலைக்கு கதிரை மற்றும் ஒரு தொகுதி காகிதாதிகள், எம்.எஸ்.எம். இஸ்ஸதீன் ஜே.பி பெளண்டேசன் நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். றியாஸிடம், எம்.எஸ்.எம். இஸ்ஸதீன் ஜே.பி பெளண்டேசனின் ஊடகச் செயலாளர் ஆர். றசீன் குறித்த பொருட்களை இன்று (28) கையளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகேதாரர் எம்.எஸ்.எம். இஸ்ஸதீன், சஊதி அரேபியாவில் தொழில் நிமித்தம் வசித்து வரும் நிலையில், இவ்வாறான உதவிகளை ‘எம்.எஸ்.எம். இஸ்ஸதீன் ஜே.பி பெளண்டேசன்’ ஊடாகச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் ஏ.எல்.எம். பசீல் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எப். முகம்மது பெளமி (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி பாடசாலைக்கு புதிய அதிபராக அண்மையில் நியமிக்கப்பட்ட றியாஸ், பல்வேறு அபிவிருத்திப் பணிகளை பாடசாலையில் மேற்கொண்டு வருகின்றார்.