
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளும், நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (27) செவ்வாய்க்கிழமை மூடப்படும என்று, கல்வியமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை மட்டுமே பாடசாலைகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான கலைப் பாடங்களின் செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நடைபெறும்.



