
பிரேசில் ஜனாதிபதியாக லூலா டா சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளமைக்கு, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான – நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தனது X தளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளுக்காகவும், அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திர அரசு அமைக்கும் உரிமைக்காகவும் – பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை பாராட்டுவதாகவும், றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
”அவருக்குக் கிடைத்துள்ள இந்த புதிய மக்கள் ஆணை – அமைதி, நீதி மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுத்துச் செல்லவும், அதே வேளையில் இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும் உதவட்டும்” எனவும், தனது வாழ்த்துச் செய்தியில் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரேசில் ஜனாதிபதியாக லூலா டா சில்வா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், நான்காவது முறையாகப் பதவியேற்கவுள்ளார்.



