
நாடு முழுவதும் 700,000 லிட்ரோ எரிவாயு சிலின்டர்களை இன்று (27) விநியோகிக்கவுள்ளதாக, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
சந்தையில் நிலவும் அதிக தேவையை கருத்தில் கொண்டு, ஒக்டோபர் 22ஆம் திகதியும் நேற்றும் இலங்கைக்கு வந்த எரிவாயு கப்பல்களுக்கு மேலதிகமாக, 3,900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வந்த ‘குட்வில்’ என்ற கப்பல் ஒக்டோபர் 24 அன்று வந்தடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கேற்ப, விநியோக நடவடிக்கைகளை விரைவுபடுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், வரும் நாட்களில் – சந்தையில் வீட்டு உபயோக எரிவாயுவிற்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில், தடையின்றி கிடைக்கும் என்றும் நுகர்வோருக்கு அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.



