
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், அவரை இன்று லஞ்ச, ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அவர் பதவியில் இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான மூன்று தனித்தனி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பில் இவர் கைதானர்.
நிஷாந்த விக்ரமசிங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் வருமாறு;
- விமானம் UL319 இன் இலக்கை மாற்றியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4,512 அமெரிக்க டொலர் நிதி இழப்பை ஏற்படுத்தியைமை. இந்த விமானம் முதலில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 22 ஜனவரி 2014 அன்று கட்டுநாயக்கவுக்குப் பயணிக்க திட்டமிடப்பட்டது.
- மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வந்து, 26 ஜனவரி 2014 அன்று UL 563 விமானத்தில் பிரான்சுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட 75 பயணிகளை இறக்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 19,160 அமெரிக்க டொலர் நிதி இழப்பை ஏற்படுத்தியமை
- கட்டுநாயக்க 18 வது ‘மைல் போஸ்ட்’ அரங்கில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு, 19 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியமை.
நிஷாந்தா விக்ரமசிங்க முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷாவின் சகோதரர் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மிஹின் ஏர் ஆகியோரின் தலைவராக பணியாற்றினார்.



