தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் எட்டப்படும் என்று – தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் இந்த ஆச்சரியமான கருத்தை வெளியிட்டார் என, அல் ஜசீரா குறிப்பட்டுள்ளது. போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்ட சிலரிடம் பேசிய பிறகு – தான் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார்.

“அது நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

“அடுத்த வாரத்திற்குள் நாங்கள் போர் நிறுத்தம் ஒன்றைப் பெறப் போகிறோம் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று கூறிய ட்ரம்ப், அவர் யாருடன் தொடர்புகொண்டார் என்பதை வெளிப்படுத்தவில்லை.

ட்ரம்பின் இந்த தகவல், காஸாவின் பசி மற்றும் குண்டுவீச்சுக்கு உள்ளான மக்களுக்கு “வரவேற்கத்தக்க செய்தி” என்று அல் ஜசீராவின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் அதிக கொலைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு – சர்வதேச அளவில் கண்டனம் அதிகரித்து வரும் நேரத்திலும், மனிதாபிமான உதவியை நாடும் நிராயுதபாணியான பலஸ்தீன பொதுமக்களை சுடுமாறு இஸ்ரேலிய படையினர் உத்தரவிட்டதாக சமீபத்தில் அம்பலமான நிலையிலும், ட்ரம்பின் போர் நிறுத்தம் பற்றிய பேச்சு வெளியாகியுள்ளது.