தலைப்புச் செய்திகள்

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதால் பதட்டம்

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி இரண்டு உறுப்பினர்கள் இன்று (27) சபைக்குச் சென்று கொண்டிருந்த போது -கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, வெலிகம பிரதேச சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை நியமிப்பதற்கான வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மேற்படி இரண்டு உறுப்பினர்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், சபை அதன் அமர்வை நடத்துவதைத் தடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட இரண்டு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் திரும்பி வந்த பின்னரே சபை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளது.