தலைப்புச் செய்திகள்

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் ‘அழிக்கப்பட்டு விட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

நேட்டோ உச்சிமாநாட்டின் போது, பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஃபோர்டோ அணுசக்தி நிலையம் “அழிக்கப்பட்டு விட்டது” என்று கூறினார்.

இந்த தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை சில வாரங்கள் மட்டும் பின்னுக்குத் தள்ளியதாக, அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பிய ஓர் ஊடகவியலாளரை ட்ரம்ப் இதன்போது திட்டினார்.

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க தாக்குதலை நடத்திய விமானிகளிடம் தான் பேசியதாகவும், தாக்குதல்கள் “சரியானவை” என்று அவர்கள் கூறியதாகவும் டிரம்ப் மேலும் கூறினார்.

“அந்த விமானிகளைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும், மேலும் நீங்கள் அவர்களை இழிவுபடுத்த முயற்சிக்கக்கூடாது” என்று ஊடகவியலாளர்களிடம் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய போரால் தடைப்பட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நான் உங்களுக்குச் சொல்கிறேன், அடுத்த வாரம் ஈரானுடன் பேசப் போகிறோம். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம், எனக்குத் தெரியாது” என்று டிரம்ப் நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்று கூறிய டிரம்ப், அமெரிக்க தாக்குதல்கள் அதன் அணுசக்தி திட்டத்தை அழித்துவிட்டதாகக் கூறினார்.