
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இன்று (6) காலை – பொலிஸ் நிலைய ஓய்வறையில் ரி-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு, உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் ஹசலகவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எம். உபசேன அத்தநாயக்க (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.
உயிரை மாய்த்துக் கொண்டவர் சிறிது காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், சம்பவத்திற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.



