
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது தாஹிர் லஃபார் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு இன்று (07) இந்த முடிவை அறிவித்தது.
ஆனந்த விஜேபால – ஜனாதிபதியின் பணிக் குழாம் தலைமை அதிகாரியாக இருந்து கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதாகவும், அதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவராக அறிவிக்குமாறு கோரியும் – இலங்கை பொதுஜன பெரமுன நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்தார்.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்துள்ளது.
தொடர்பாான செய்தி: அரச பதவி வகித்துக் கொண்டு அமைச்சராக இருப்பவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு மனுத்தாக்கல்



