தலைப்புச் செய்திகள்

61 நாட்கள் தலை மறைவாக இருந்த, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர சரணடைந்தார்

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து வந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர – இன்று (07) மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை – போலி ஆவணங்களை தயாரித்து, தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணவீர குற்றப் புலனாய்வுத் துறையால் தேடப்பட்டு வந்தார்.

பிரசன் ரணவீர மற்றும் மற்றொரு சந்தேக நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் முன்னர் ஆணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மேற்படி இருவரும் கைது செய்யப்படாமல் தப்பித்து வந்தனர்.

இவ்வாறு 61 நாட்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து வந்த பிரசன்ன ரணவீர இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.