தலைப்புச் செய்திகள்

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரிடம் சிக்கிய பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு விளக்க மறியல்

அக்மீமன பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தர், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இமதுவ பிரதேச சபைத் தேர்தலில் – பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுகின்றார்.

உனவதுன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர்த்தக உரிமை வழங்குவதற்காக, இவர் லஞ்சம் பெற்ற போது கைதானார்.

ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் லஞ்சம் பெற்றபோது, ​​லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

அங்குலுகஹ கமகே டென்னிசன் ஜெயதில எனும் சந்தேக நபர் – காலி பதில் நீதவான் லலித் பத்திரண முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை மே 09ஆம் திகதி வரை வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.