
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்வதற்கு – பகிடிவதை காரணமாக அமைந்தமை உறுதியானால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட கல்வி அமைச்சு, சம்பவம் குறித்து விசாரிக்க ஏற்கனவே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டதும் – பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை சம்பவத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நபர் – சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் கற்றுவந்த 23 வயதுடை இரண்டாம் ஆண்டு மாணவராவார்.



