தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அமைதிக் காலம் அறிவிப்பு

ள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அமுல்படுத்தப்படும் அமைதிக் காலம் மே 03ஆம் திகதி ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னர் அமைதிக் காலம் ஆரம்பமாவது வழமையாகும்.

அந்த வகையில் மே 03 முதல் தேர்தல் நடைபெறும் மே 06ஆம் திகதி வரை, தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுபட முடியாது.

அதேபோன்று ஊடகங்களும் தேர்தல் விளம்பரங்களை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.