தலைப்புச் செய்திகள்

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது

கதிர்காமம் பிரதேச சபையின் முன்னார் தவிசாளர் அசோக விக்ரமசிங்க இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு சொந்தமான, மாணிக்க கங்கைக்கு அருகிலுள்ள ஒரு கட்டுமானத் திட்டத்துக்கு – முறைகேடாக இவர் அனுமதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காம பிரதேச சபையின் முன்னாள் தலைவராக இருந்த அசோக விக்ரமசிங்க இன்று (09) குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.