
கிளிநொச்சியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவின் பெறுமதி 121 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – உடுத்துரை கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நேற்று (08) நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது, சுமார் 304 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது ஒரு டிங்கி படகையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முள்ளியன் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டார்.
கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுடன் சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



