
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நேற்று (08) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பிலுள்ள அவரின் கட்சி அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
சிவில் உடையில் வந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பிள்ளையானை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்படும் போது – அவரின் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையிலேயே, நேற்றிரவு கைது செய்யப்பட்ட அவர், இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.



