
கனேமுல்ல சஞ்சீவவுடன் அவரைச் சுட்டுக் கொன்ற நபர் சிறிது காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளார். இதனை – துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளராக – தான் இருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார்.
பெண் சந்தேக நபரை துப்பாக்கிதாரிக்கு அறிமுகப்படுத்திய பத்மே, அவர் ஊடாக இந்த கொலைக்குத் திட்டமிட்டிருக்கக்கூடும் என, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற எண் 05 இன் குற்றவாளிக் கூண்டில் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்பான செய்தி: நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் முஸ்லிம் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் தகவல்



