தலைப்புச் செய்திகள்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு: ரி56 துப்பாக்கியுடன் இருவர் கைது

கொட்டாஞ்சேனையில் நபரொருவர் இன்று மாலை (21) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் கைத்தொலைபேசி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் இருந்தபோது, ​​37 வயதுடைய சஷி குமார் என்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டரி56 துப்பாக்கியும் பறிமுதல் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் என்ன என்பது தொடர்பிலும், நடந்து வரும் குற்றச் செயல்களுடன் இந்தச் சம்பவத்துக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.