
காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இஸ்ரேலிய கைதிகளை ஏற்றுக்கொள்ளும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தொடங்கியுள்ளது என்று இஸ்ரேலிய சேனல் 12 தெரிவித்துள்ளது.
தனித்தனியாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஓர் அதிகாரி ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்; காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவினர் கைதிகளை பெற்றுக்கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விடுவிக்கப்படும் பெண் பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்தினர் காஸாவில் உள்ள ஒரு சிறப்பு ராணுவப் பிரிவுக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, ஆரம்ப சுகாதார பரிசோதனைகளுக்காக காஸாவுக்கு அருகில் இஸ்ரேலில் அமைந்துள்ள ஒரு ராணுவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அங்கு அவர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட ரோமி கோனென், எமிலி டமாரி மற்றும் டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் ஆகிய மூன்று பெண்களை ஹமாஸ் இன்று விடுவிக்கவுள்ளது.
தொடர்பான செய்தி: மூன்று மணிநேர தாமதத்துக்குப் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம் அமுலானது: அதற்குள் 19 பேர் பலி
இதையும் பாருங்கள்



