
– தில்சாத் பர்வீஸ் –
சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்துக்கு உட்பட்ட செனவட்டை உடங்கா பாலம் உடையும் நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
குறித்த பாலத்தின் நிலை பற்றி – உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், இதுவரையில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப் பாலமானது செனவட்டை , நெடியாள்ளகண்டம்,கொக்கநாரை உள்ளிட்ட வயல் பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதையில அமைந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, எதிர் வரும் ஒரு மாத காலத்திற்குள் இப் பகுதியில் நெல் அறுவடை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




