
உர மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 95 வீதம் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றுவரை விவசாயிகளுக்கு மொத்தம்16,369 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதா விவசாய திணைக்கள ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, மானியத் திட்டத்தின் கீழ் 9,889 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜனவரி 15க்குள்) கூடுதலாக 1,666 மில்லியன் ரூபாயினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஆணையர் நாயகம் குறிப்பிட்டார்.
விவசாயம் முதன்மை வாழ்வாதாரமாக உள்ள அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு அதிக மானியத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



