தலைப்புச் செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கான நிதியை அதிகரிப்பதற்கு அனுமதி

அஸ்வெசும பயனாளர்களுக்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, வறிய குடும்பம் ஒன்றுக்காக வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பனவு 17,500 ரூபாயாக அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 8,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பம் ஒன்றுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

2,500 ரூபாய் வழங்கப்படும் குடும்பம் ஒன்றுக்காக 5000 ரூபாயை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5,000 ரூபாய் வழங்கப்படும் குடும்பங்களுக்கான கொடுப்பனவை மாற்றமின்றி தொடரவும் அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.