தலைப்புச் செய்திகள்

விளக்க மறியலில் இருந்த நண்பனுக்காக, உணவுப் பாத்திரத்துக்குள் ஹெரோயின் கடத்தியவருக்கு ஆயுள் தண்டனை

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கு மேல் ஹெராயின் போதைப் பொருளை – உணவுப் பாத்திரத்துக்குள் மறைத்து கடத்த முயன்ற 26 வயது இளைஞருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தேவராஜா லோரன்ஸ் எனும் திருமணமாகாத இளைஞருக்கு – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரை டிசம்பர் 4, 2019 அன்று – சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட – நண்பரொருவருக்கு உணவு எடுத்துச் சென்ற – ஒரு வாளியின் அடிப்பகுதியில் 25.09 கிராம் ஹெராயினை குற்றவாளி மறைத்து வைத்திருந்தார்.

குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு எதிராக ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகளை சட்ட மா அதிபர் தாக்கல் செய்தார்.

குற்றத்தின் தீவிரத்தன்மையையும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை நிலைநிறுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, குற்றவாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்தார்.

தொடர்பான வீடியோ