
சிறைத்தண்டனை விதித்து நேற்று (09) தீர்ப்பளிக்கப்பட்ட, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில், சாதாரண கைதிகளுக்கான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் – ஞானசார தேரருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்று 09 மாதங்கள் சிறைதண்டனையுடன் 1500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதேவேளை, சிறையில் ஞானசார தேரர் அணிய வேண்டிய ஆடையை பரிந்துரைப்பதில் – சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் – இஸ்லாத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குறித்த வழக்கி தீர்பபை – கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று வழங்கினார்.
இந்த நிலையில், தனக்ககு பிணை வேண்டி ஞானசார தேரர் – தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.



