
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிஸாம் காரியப்பர் இன்று (18) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்..
நேற்றைய தினம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர், பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலிஹ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட போதும், நிஸாம் காரியப்பர் நேற்று வருகை தரவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் அதன் பங்காளிக் கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒருவர் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்புரிமைக்காக, அந்தக் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.



